வெளியே போனா செருப்பாலே அடிப்பாங்க! ஆவேசமான நிஷா! எதனால் தெரியுமா? வைரலாகும் வீடியோ!

வெளியே போனா செருப்பாலே அடிப்பாங்க! ஆவேசமான நிஷா! எதனால் தெரியுமா? வைரலாகும் வீடியோ!


Bigboss today second promo viral

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், சண்டைகள், சுவாரசியங்கள் என அதிகமாகிக்கொண்டு,  மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவில் ரியோ அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தபோது ஷிவானி. ஆஜித், ரம்யா பாண்டியன் ஆகியோரை குறிப்பிட்டு குரூப்பிஸம் குறித்து பேசியுள்ளார். இந்நிலையில் பொங்கியெழுந்து ரம்யா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளிற்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் பட்டிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பிக்பாஸ் வீடு அன்பான குடும்பம்,   ஒரு போட்டிக் களம் என தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போட்டியாளர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர். 

இந்நிலையில் பட்டிமன்ற பேச்சாளரான நிஷா பேசும்போது, புரணி பேசுவது அழகு. ஒருவரது உள்ளத்தையும், உருவத்தையும் உடைக்கும் பொழுதுதான் அது அசிங்கம். இந்தப் புரணியைதான் வெளியே இருப்பவர்கள் செருப்பாலே அடிப்பார்கள் என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.