நீங்க என்னையதான் சொன்னீங்க! ஒத்த வார்த்தையால் ரியோ- சுரேஷுக்கு இடையே வெடித்த மோதல்! வைரலாகும் பரபரப்பு வீடியோ!

நீங்க என்னையதான் சொன்னீங்க! ஒத்த வார்த்தையால் ரியோ- சுரேஷுக்கு இடையே வெடித்த மோதல்! வைரலாகும் பரபரப்பு வீடியோ!


Bigboss today second promo viral

விஜய் தொலைக்காட்சியில் 16 பிரபலங்களுடன் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 4 நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே சண்டை, மோதல், வாக்குவாதம் என எதற்கும் குறைவில்லாமல் பிக்பாஸ் வீடு ரணகளமாக  உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சுரேஷ் மற்றும் ரியோவிற்கு  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  அதனைத்தொடர்ந்து சுரேஷ் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருப்பதாகவும், தன்னை சிலர் கார்னர் செய்வதாகவும் கூறிவந்தார். இந்நிலையில் இந்த வீட்டில் குரூப்பிஸம் இருப்பதாக நீங்கள் எப்படி கூறுகிறீர்கள் என ரியோ, சுரேஷிடம் கேட்க அதற்கு அவர் உங்களிடம்  தனியாக பேசுகிறேன் என கூறி, சரியாக பதில் அளிக்காமல் தப்பிச்சென்றார். 

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரமோவில் ரியோ மற்றும் சுரேஷ் இருவரும் குரூப்பிஸம் குறித்து மீண்டும்  பேசுகின்றனர். அப்பொழுது இருவருக்கும் இடையே மாறி மாறி வாக்குவாதம் நீளுகிறது. இந்நிலையில் இன்று ரியோ மற்றும் சுரேஷ்க்கு இடையே வாக்குவாதம் பெரிதாக வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.