இந்த வாரம் ஒரே சென்டிமெண்ட்தான்! பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடி நியூ என்ட்ரி! வைரலாகும் வீடியோ!!

இந்த வாரம் ஒரே சென்டிமெண்ட்தான்! பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடி நியூ என்ட்ரி! வைரலாகும் வீடியோ!!



bigboss-today-promo-viral-vnwqbx

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் 20 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடைபெற்று தற்போது அக்ஷரா, சிபி, ராஜு, பிரியங்கா, வருண், தாமரை, பாவனி, அமீர், சஞ்சீவ் உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த, விருப்பமான FREEZE டாஸ்க் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் அன்பு, கண்ணீர், காதல் என சென்டிமென்ட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இதில் முதல் ப்ரொமோவில் அக்ஷராவின் குடும்பம் அதிரடியாக என்ட்ரி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது  ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிபியின் உறவினர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். அவரைக் கண்டதும் சிபி இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.