அப்பாடா.. ஒரு வழியா முடிவை அறிவித்த பிக்பாஸ்! யார் யாரெல்லாம் தெரியுமா? வீடியோ இதோ!!

அப்பாடா.. ஒரு வழியா முடிவை அறிவித்த பிக்பாஸ்! யார் யாரெல்லாம் தெரியுமா? வீடியோ இதோ!!



Bigboss today promo viral

தற்போது ரசிகர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது பிக்பாஸ் சீசன் 5.  இதில் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கால் ஒவ்வொரு நாளும் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த வார தொடக்கத்தில் போட்டியாளர்கள் அனைவரையும் பிக்பாஸ் நாமினேட் செய்தார்.

மேலும் இந்த நாமினேஷனிலிருந்து தப்பிக்க நாள்தோறும் போட்டியாளர்களுக்கு மிகவும் கடினமான, வித்தியாசமான டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டு வந்தது. இதனை போட்டியாளர்கள் சண்டை, மோதல், வாக்குவாதங்களுடன் வெறித்தனமாக செய்தனர். அதனைத் தொடர்ந்து சிபி, அமீர், சஞ்சீவ் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் தப்பித்தனர்.

இந்த நிலையில் தற்போது போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நாமினேஷனில் தொடரும் போட்டியாளர்களின் பெயர்களை பிக்பாஸ் அறிவித்துள்ளார். அதன்படி 
பிரியங்கா, அபினய், வருண், அக்ஷரா, ராஜு, பாவனி ஆகியோர் பெயர் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.