நாங்கதான் ஜட்ஜ்.. செக் வைத்து பிக்பாஸ் கொடுத்த அசத்தலான டாஸ்க்.! ஆட்டம் வேற லெவலில் இருக்குதே!! வைரல் வீடியோ..

நாங்கதான் ஜட்ஜ்.. செக் வைத்து பிக்பாஸ் கொடுத்த அசத்தலான டாஸ்க்.! ஆட்டம் வேற லெவலில் இருக்குதே!! வைரல் வீடியோ..



bigboss-today-promo-video-viral-B9MHBC

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்க்குகளால் அனல் பறக்க சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் முதல் வாரத்திலேயே அனன்யா எலிமினேட் ஆனார். 

அவரைத் தொடர்ந்து பாவா செல்லத்துரை தானாகவே வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் விஜய் வர்மா மற்றும் கடந்த வாரம் வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டனர். மேலும் விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ், பிராவோ, கானா பாலா, அன்னபாரதி ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைந்துள்ளனர்.அவர்கள் வந்ததுமே பழைய போட்டியாளர்கள் இவர்களுடன் வாக்குவாதங்கள் செய்து பழி தீர்த்து சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இன்று BB Talent என்ற புதிய டாஸ்க்கை கொடுத்துள்ளார். அதற்கு நடுவர்களாக அர்ச்சனா மற்றும் பிராவோ தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் விஜே அர்ச்சனா 5 வைல்டு கார்டு போட்டியாளர்களையும் சின்ன பாஸ் வீட்டிற்கு அனுப்பிச்சீங்கள.. இப்போ நீங்க ஆட போறதுக்கு நாங்கதான் ஜட்ஜ் என அதகளம் செய்துள்ளார். மேலும் போட்டியாளர்களும் வேற லெவலில் கலக்கியுள்ளனர். இதுகுறித்த ப்ரமோ வீடியோ வைரலாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.