பிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க்! பயங்கர மழை, நள்ளிரவில் தூங்கமின்றி தீயாய் போராடும் போட்டியாளர்கள்! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க்! பயங்கர மழை, நள்ளிரவில் தூங்கமின்றி தீயாய் போராடும் போட்டியாளர்கள்! வைரலாகும் வீடியோ!



Bigboss today first promo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இடையே அன்பு, காதல், அக்கறை, சண்டை, வாக்குவாதம் என எதற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

மேலும் பிக்பாஸ் நாளுக்கு நாள் வித்தியாசமான டாஸ்க் கொடுத்து சுவாரஸ்யங்களை அதிகரித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு இந்த வாரத்திற்கான கடுமையான பட்ஜெட் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் பயங்கர ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகின்றனர்.

பிக்பாஸ் கொடுத்த மணிக்கூண்டு டாஸ்க்கை கடுமையான மழை, இடி மின்னல், நடுங்கவைக்கும் நள்ளிரவில் தூக்கமின்றி மேற்கொண்டு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்த இன்றைய நாளிற்கான முதல் பிரமோ வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.