வந்த மறுநாளே சுசித்ரா வைத்த ஆப்பு! ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ரவுண்டு கட்டி யாரை நாமினேட் செய்துள்ளனர் பார்த்தீர்களா!

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உற்சாகங்கள், வாக்குவாதங்கள், சண்டைகள் என எதற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது வாரத்தில் நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஆஜித் குறைவான வாக்குகளைப் பெற்ற நிலையில், வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில், தன்னிடமிருந்த எவிக்ஷன் ப்ரீபாஸை வைத்து தப்பித்தார். மேலும் வார இறுதியான நேற்று ஆரி, ஆஜித், நிஷா, சுரேஷ், வேல்முருகன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் வேல்முருகன் வெளியேற்றப்பட்டார்.
#Day29 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/W6tijclKTv
— Vijay Television (@vijaytelevision) November 2, 2020
அதனைத் தொடர்ந்து புதிய போட்டியாளராக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இவரால் பிக்பாஸ் வீட்டில் சூடுபறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய நாளைக்கான முதல் ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் இன்றைய வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுகிறது. அதில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஆரி மற்றும் அர்ச்சனா ஆகியோரை நாமினேட் செய்துள்ளனர். மேலும் சுசித்ராவும் அர்ச்சனாவை நாமினேட் செய்துள்ளார்.