
Bigboss tharsan dance to bigil song
பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், லாஷ்லியா, ஷெரின் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகிய நால்வர் மட்டும் இறுதி கட்டத்திற்கு தேர்வாகினர்.
பின்னர் அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் மூன்று பட்டத்தை கைப்பற்றியதோடு 50 லட்சம் பரிசு தொகையையும் வென்றார். மேலும் இரண்டாம் இடத்தை சாண்டியும், மூன்று மற்றும் நான்காம் இடத்தை லாஷ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் கைப்பற்றினர்.
இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் இலங்கையை சேர்ந்த தர்சன். விளம்பர மாடலான இவர் பிக்பாஸ் கொடுத்த அனைத்து டாஸ்க்குகளையும் விறுவிறுப்பாக செய்து வந்த நிலையில், இறுதி வரை சென்று பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என அனைவரும் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இது போட்டியாளர்கள் பார்வையாளர்கள் என அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருப்பினும் அவரது நண்பர்களான இறுதிப் போட்டி யாளர்கள் அவரை விட்டுக் கொடுக்காமல் வெற்றி மேடையிலேயே அவரைப் பெருமைப் படுத்தினர். மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்சனுக்கு படவாய்ப்புகள் குவியத் துவங்கியது. இந்நிலையில் விஜயதசமி கொண்டாட்டமாக தர்ஷன் பிகில் படத்தின் வெறித்தனம் பாடலுக்கு நடனமாடி அதை விடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் அதற்கு பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement