நீண்ட வருடங்களுக்கு பிறகு நிறைவேறிய பிக்பாஸ் தாமரையின் அந்த ஆசை.! அளவில்லா மகிழ்ச்சியுடன் அவரே பகிர்ந்த புகைப்படம்.!

நீண்ட வருடங்களுக்கு பிறகு நிறைவேறிய பிக்பாஸ் தாமரையின் அந்த ஆசை.! அளவில்லா மகிழ்ச்சியுடன் அவரே பகிர்ந்த புகைப்படம்.!


Bigboss Thamarai met his son after long years

நாடக கலைஞராக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தாமரை. அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் அவரது வெள்ளந்தியான பேச்சும், செயலும் ரசிகர்களை கவர்ந்தது.

ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து முழுதும் அறியாத தாமரை பின்னர் புரிந்து கொண்டு கடுமையான போட்டியாளர்களுள் ஒருவராக இருந்தார். பின் மக்களிடையே பிரபலமான அவர் பிக்பாஸ் அல்டிமேட், பிக்பாஸ் ஜோடிகள் 2 போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் அவர் பாரதி கண்ணம்மா தொடரிலும் நடித்துள்ளார். தாமரை பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, தனது முதல் கணவரின் மகனை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டதாகவும், அவன் தன்னைத் தவறாக புரிந்து கொண்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும், அவர் தன்னிடம் மீண்டும் வந்து சேர வேண்டும் என கண்ணீருடன் கூறியிருந்தார்.

Bigboss thamarai

மேலும் அவருக்காகதான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு தாமரை சமீபத்தில் தனது மகனை சந்தித்துள்ளார். அவருடன் எடுத்த புகைப்படத்தை அவர் மகிழ்ச்சியோடு சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Bigboss thamarai