சமந்தாவுக்கே செம டப் கொடுப்பாங்கபோல!! பிக்பாஸ் தாமரை போட்ட ஆட்டத்தை பாருங்க!



bigboss-thamarai-dance-video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசனை நடிகர்  கமல் ஹாசன் தொகுத்து வழங்க, இந்த  சீசனில் பல்வேறு துறையை  சார்ந்த  18 பிரபலங்கள்  கலந்து  கொண்டனர்.

பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்றநிலையில், சமீபத்தில் இந்த போட்டி முடிவுக்கு வந்தது. பிக்பாஸ் சீசன் 5 பட்டத்தை பன்முக கலைஞர் ராஜு தட்டிச்சென்றார்.

சீசன் 5 இல் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களும் நல்ல வரவேற்பையும் பெற்றனர். அதில், நடன துறையை  சேர்த்த தாமரை செல்வி மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவரின் அசால்டான  பேச்சு, விருவிறுப்பு  வேலை, அமைதியான  குணம் இவையெல்லாம் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.

முதல் இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார் என்று அனைவரும் எண்ணிய நிலையில், 15 வாரங்கள் தாக்குப்பிடித்து, டாப் 6ல் ஒருவராக வந்தார் தாமரை. இந்நிலையில், தாமரை செல்வி மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான ஜக்கி பெர்ரியும் சேர்ந்து புஷ்பா படத்தில் நடிகை  சமந்தா  நடனமாடிய ஊ  சொல்றியா மாமா பாடலுக்கு கலக்கல்  குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதோ  அந்த வீடியோ காட்சி...