சினிமா

பிக்பாஸ் சினேகனுக்கு விரைவில் டும் டும் டும்! இந்த தமிழ் நடிகைதான் மணப்பெண்! வெளியான சூப்பர் தகவல்!!

Summary:

தமிழ்சினிமாவில் பல படங்களில், ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி பெரும் பிரபலமாக இருந்தவர் சினேகன

தமிழ் சினிமாவில் பல படங்களில், ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி பெரும் பிரபலமாக இருந்தவர் சினேகன். அதனை தொடர்ந்து அவர் யோகி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பின்னர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து சினேகன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார்.

மேலும் இந்த நிகழ்ச்சி அவரை மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைய செய்தது. அதனைத் தொடர்ந்து சினேகன் தற்போது பொம்மிவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் சினேகன் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் சினேகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தது.

அதனை தொடர்ந்து தற்போது சினேகனுக்கு ஜூலை 29-ம் தேதி கன்னிகா ரவி என்பவருடன் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடைபெறவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. கன்னிகா ரவி கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து பல தொடர்களில் நடித்த அவர் சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


Advertisement