சினிமா வீடியோ

அழகிய அசுராவாக ரசிகர்களை சுண்டியிழுத்த பிக்பாஸ் ஷெரின்.! இணையத்தை கலக்கும் வீடியோ இதோ!!

Summary:

Bigboss shrin tiktok video viral

தமிழ்சினிமாவில்  துள்ளுவதோ இளமை என்ற படத்தில் தனுசுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷெரின். அதனை தொடர்ந்து அவர் ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், உற்சாகம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  மேலும் ஒரு சில படங்களில் ஒற்றைப் பாடலுக்கும் நடனமாடியுள்ளார். 

இந்நிலையில் பட வாய்ப்புகள் எதுவும் பெருமளவில் இல்லாத நிலையில் நடிகை ஷெரின் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் ஆரம்பத்தில் இவரை பலர் மோசமாக விமர்சனம் செய்தாலும் நாளடைவில் இவரது குணத்தால் ஏராளமான ரசிகர்களும் உருவாகினர். மேலும் ஷெரின் 105 நாட்கள் கடந்த நிலையில் இறுதிகட்டத்திற்கும் சென்றார். 

 ஷெரின் என்றாலே ரசிகர்கள் மனதில் உடனே நினைவுக்கு வருவது விசில் படத்தில் இடம்பெற்ற அழகிய அசுரா என்ற பாடல்தான். இந்நிலையில் ஷெரின் தற்போது அப்பாடலுக்கு டிக்டாக்  வீடியோ செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் அதனை பகிர்ந்து வருகின்றனர். 

View this post on Instagram

Ooo sherin eh♥️

A post shared by BIGG BOSS LOLS™ (@_bigg_boss_lols_) on


Advertisement