செவ்வாழை உனக்கே இது நியாயமா இருக்குதா.? இரண்டு மனைவிகள் இருந்தும் மூன்றாவது மனைவியை தேடும் பிக் பாஸ் பிரபலம்.!Bigboss saravanan controversial news about his third wife

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் ஆறு சீசன்களாக ஒளிபரப்பாகி வெற்றி பெற்று வரும் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெருகிக்கொண்டே தான் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் சினிமா துறையில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைப்பதால் இந்நிகழ்ச்சி பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

saravanan

இதன்படி, பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் தான் நடிகர் சரவணன். இவர் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை  என்பதால் நீண்ட வருடங்களுக்கு பிறகு 'பருத்திவீரன்' திரைப்படத்தில் செவ்வாழை என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தார்.

saravanan

இதுபோன்ற நிலையில், பிக் பாஸ் சீசனில் முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் இரண்டாவது மனைவியை காதலித்து திருமணம் செய்த குழந்தை பெற்றுக் கொண்டேன். எனக்கு இரண்டு மனைவி எனக்கு என்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.

இதன் பிறகு தற்போது முதல் மனைவி சரவணன் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் என் கணவன் என்னை விட்டுவிட்டு மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். என்னை வீட்டை விட்டு வெளியே  செல்லுமாறு கொடுமைப்படுத்துகிறார் என்று புகார் அளித்திருக்கிறார். இச்செய்தி வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.