தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
வெல்கம் சிஷ்யா.. அதிரடியாக என்ட்ரி கொடுத்த பிரபலம்! செம ஹேப்பியாக வரவேற்ற குருநாதர்! யார் பார்த்தீங்களா!!
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்து கொண்ட 14 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
பின்பு வைல்டு கார்டு எண்ட்ரியாக சதீஷ், ரம்யா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். மேலும் ஆரம்பத்தில் போட்டியாளராக கலந்து கொண்டு ஒரு சில நாட்களிலேயே எலிமினேட்டான சுரேஷ் சக்கரவர்த்தியும் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக அவர் விட்டை விட்டு தற்போது வெளியேறியுள்ளார்.
அவர்களை தொடர்ந்து நேற்று கலக்கப் போவது யாரு தீனா பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார். இந்நிலையில் இன்று சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். உள்ளே வந்த சாண்டியை பிக்பாஸ், சிஷ்யன் வெல்கம் என வரவேற்றுள்ளார்.
சாண்டி இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் பிக்பாஸை குருநாதா என்று அழைப்பார். பிக்பாஸும் சாண்டியை சிஷ்யா என அழைப்பார். இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.