அடேங்கப்பா! என்னவொரு வெறித்தனமான ஆட்டம்!! சாக்ஷியின் மாஸ் வீடியோவைக் கண்டு வாயடைத்துபோன ரசிகர்கள்!!

அடேங்கப்பா! என்னவொரு வெறித்தனமான ஆட்டம்!! சாக்ஷியின் மாஸ் வீடியோவைக் கண்டு வாயடைத்துபோன ரசிகர்கள்!!


Bigboss Sakshi dance video viral

பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில் கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் சென்னை பெண்ணான நடிகை சாக்ஷி.இவர்  கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் தமிழில் யோகன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி நடிகர் கவினுடன் காதல் ஏற்பட்டநிலையில் சர்ச்சைகளில் சிக்கினார். அதனை தொடர்ந்து கவின் லாஸ்லியாவை  காதலிப்பதாக கூறி வந்த நிலையில் கவின் மீது குற்றம்சாட்டி வந்தார். 

bigboss

 அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் விஷால் நடிப்பில் வெளிவரும் ஆக்சன் படத்திலும் டப்பிங் பேச உள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக தீவிர பயிற்சியோடு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சாக்ஷி அசத்தலாக குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.