வாவ்.. திருமணக் கோலத்தில் பொறாமைப்பட வைக்கும் பேரழகில் ஜொலிக்கும் பிக்பாஸ் நமிதா! சொக்க வைக்கும் புகைப்படங்கள்!!

வாவ்.. திருமணக் கோலத்தில் பொறாமைப்பட வைக்கும் பேரழகில் ஜொலிக்கும் பிக்பாஸ் நமிதா! சொக்க வைக்கும் புகைப்படங்கள்!!


bigboss-namitha-marimuthu-latest-photoshoot

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. இந்த சீசனில் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். மேலும் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த சீசனில் திருநங்கையான நமீதா மாரிமுத்து போட்டியாளராக கலந்து கொண்டார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் ஒன்றில் தான் குடும்பத்திலும், சமூகத்திலும் பட்ட அவமானங்கள், கஷ்டங்கள் போன்றவற்றை கண்ணீருடன் பகிர்ந்தார். அவரது பேச்சு சக போட்டியாளர்கள், பார்வையாளர்கள் என அனைவரையும் கண்கலங்க வைத்தது. மேலும் அவருக்கென ஏராளமான ரசிகர்களும் உருவாகினர். பின்னர் ஓரிரு நாட்களிலேயே நமீதா தவிர்க்கமுடியாத சில காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நமீதா அவ்வப்போது அழகழகாக, வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது மணப்பெண் போல மேக்கப் செய்து பேரழகில் ஜொலிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.