சினிமா

பிக்பாஸில் வெற்றிபெற்ற பணத்தை வைத்து முகேன் என்ன செய்யப்போகிறார் தெரியுமா? அவரே கூறிய தகவல்!!

Summary:

Bigboss mugen talk about winning money

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில்  கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.மேலும் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் பிக்பாஸ் பட்டத்தை வென்று 50 லட்சம் தொகையை பெற்றார். 

பிக்பாஸ் போட்டியின் வெற்றியாளர் முகேன் மலேசியாவை சேர்ந்த பாடகர் ஆவார். இவர் பிக்பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களிடமும் மிகவும் நட்புடன் நடந்து கொண்டார் மேலும் கைவினைப் பொருட்கள் செய்வது கலகலப்பாக இருப்பது என ரசிகர்களிடமும் பெருமளவில் பிரபலமானார். மேலும் போட்டியாளர்கள் மட்டுமின்றி கமலும் கூட அவரை சில இடங்களில் பாராட்டி பேசி இருந்தார்.

 இந்நிலையில்  சமீபத்தில் முகேன் ரசிகர்கள் கேட்டகேள்விக்கு பதிலளித்திருந்தார். அப்பொழுது ஒருவர், நீங்கள் வெற்றி பெற்ற பணத்தில் இருந்து புற்றுநோய் மையத்திற்கு உதவ இருப்பதாக வெளிவந்த தகவல் உண்மைதானா என கேட்டார்.

அதற்கு முகேன்  அதுகுறித்து நான் இன்னும் எதுவும் யோசிக்கவில்லை எனவும் பணத்தைப் பற்றி நான் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


Advertisement