அடேங்கப்பா! பிக்பாஸ் கவினா இது! சிறுவயதில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!bigboss kavin smalla age photo viral

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் தமிழ் மக்களிடையே பெருமளவில் பிரபலமான நடிகர் கவின். இவர் தமிழ் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

 இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் சக போட்டியாளர்களுடன் ஜாலியாகவும், ஆட்டம் பாட்டம் என கலகலப்பாகவும் இருந்தார். அதனை தொடர்ந்து அபிராமி,சாக்ஷி மற்றும் லாஸ்லியாவுடன் காதல் போன்ற விவகாரங்களில் சிக்கி பல சர்ச்சைகளுக்கு உள்ளானார்.

kavin

மேலும் அதைத் தொடர்ந்து அவரைக் குறித்து மோசமான விமர்சனங்களும் எழ தொடங்கியது. இருப்பினும் கவினுக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், 5 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு கவின் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

 அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக ஜாலியாக இருந்து வந்தனர். இந்நிலையில் தற்போது கவினின்  சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் கவினா இது!  சிறுவயதில் எவ்வளவு அழகு என புகழ்ந்து வருகின்றனர். 

                                    kavin