பிக்பாஸ் கவினின் அம்மா கைது.! 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!! இதற்காகத்தானா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

பிக்பாஸ் கவினின் அம்மா கைது.! 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!! இதற்காகத்தானா? வெளியான அதிர்ச்சி தகவல்!!


bigboss-kavin-mother-arrest-for-money-cheating

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிலையில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 65 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 3 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இ ந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுள் ஒருவர்  சரவணன் மீனாட்சி புகழ் கவின். இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் தனது காதல் லீலைகளால்  பல சர்ச்சைகளில் சிக்கினார். அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா என அனைவரிடமும் பழகி வந்த நிலையில் அது பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

kavin

மேலும் அவர் லாஸ்லியாவுடன்  நெருங்கிப்பழகி வந்த நிலையில் கமலே சுட்டிக்காட்டி அவர்களுக்கு அறிவுரை வழங்கும் அளவிற்கு விவகாரம் வெடித்தது. இவ்வாறு கவின் ஒருபக்கம் பிஸியாக இருக்கும் நிலையில், சீட்டு கம்பெனி நடத்தி 34 பேரிடம் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை பண மோசடி செய்ததாக கவின் தாயார் ராஜலட்சுமி  அவரது மருமகள் ராணி, மேலும் தமயந்தி, அருணகிரி, சொர்ணராஜன் ஆகியோர் மீது  2007 -ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில் அருணகிரி, சொர்ணராஜன் உயிரிழந்த நிலையில் அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டு கவின் தாயார் உட்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.