ஒரு முயற்சிதான்! பிக்பாஸ் ஜுலி வெளியிட்ட வீடியோ! நல்லாத்தான் இருக்கு.. பாராட்டும் ரசிகர்கள்!!

ஒரு முயற்சிதான்! பிக்பாஸ் ஜுலி வெளியிட்ட வீடியோ! நல்லாத்தான் இருக்கு.. பாராட்டும் ரசிகர்கள்!!


bigboss julie singing video viral

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவில்  பிரபலமானவர் ஜூலி. அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டார்.  பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருமளவில் இருந்தது. 

ஆனால் நாளடைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் அவரது சில நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார். பின்னர் அவர் என்ன செய்தாலும் நெட்டிசன்கள்  கலாய்க்க துவங்கியுள்ளனர். ஆனாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் என பயங்கர பிஸியாக உள்ளார்.

மேலும் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.  தற்போது 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம்பெற்றுள்ள நினைத்து நினைத்து பார்த்தால் பாடலை பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு, ஒரு முயற்சி என பதிவிட்டுள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் நல்ல முயற்சி என பாராட்டி வருகின்றனர்.