சினிமா

அட.. பிக்பாஸ் ஜூலியா இது! சட்டை பட்டனை கழற்றிவிட்டு ஏன் இப்படியெல்லாம்? வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்!

Summary:

பிக்பாஸ் ஜூலி சட்டை பட்டனை கழற்றி விட்டு மிகவும் கிளாமராக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவில்  பிரபலமானவர் ஜூலி. அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டார்.  பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தது. 

ஆனால் நாளடைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் அவரது சில மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார். அன்றிலிருந்து இன்றுவரை அவர் என்ன செய்தாலும் நெட்டிசன்கள்  மோசமாக கலாய்த்தும் திட்டியும் வருகின்றனர். ஆனால் அதனை சிறுதும் பொருட்படுத்தாத ஜூலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் என பயங்கர பிஸியாக உள்ளார்.

மேலும் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில்  அவர் தற்போது தனது சட்டை பட்டனை கழற்றி விட்டு மிகவும் கிளாமராக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் பிக்பாஸ் ஜூலியா இது? ஏன்  இப்படியெல்லாம் என விளாசி வருகின்றனர்.


Advertisement