மீண்டும் பிக்பாஸில் ஜூலியும், ஓவியாவும்.. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலி வெளியிட்ட வீடியோ.!

மீண்டும் பிக்பாஸில் ஜூலியும், ஓவியாவும்.. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலி வெளியிட்ட வீடியோ.!



bigboss-juli-viral-video

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி, தற்போது 7ஆவது சீசனை நோக்கிப் போகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இதில் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று, அனைவரும் மனதிலும் இடம் பிடித்தவர் ஓவியா. இவருக்கென்று ஓவியா ஆர்மி தற்போது உள்ளது.

bigboss

இந்நிலையில், விஜய் டிவியின் "ஸ்டார்ட் மியூசிக்" நிகழ்ச்சியில், பிக் பாஸ் பிரபலங்களான ஓவியா, ஜூலி, சுஜா வாருணி, ரித்விகா, சென்ராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட புகைப்படங்களில், ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், வரும் அக்டோபர் 1ஆம் தேதி "பிக் பாஸ் சீசன் 7" நிகழ்ச்சி தொடங்கப் போவதாக, ஒரு அறிவிப்பை வெளியிட்டு விஜய் டிவி தரப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஓவியா ரசிகர்கள், 'ஸ்டார்ட் மியூசிக்' நிகழ்ச்சிக்கு வந்தது போல, பிக் பாஸுக்கும் ஓவியா வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

bigboss

முன்னதாக, பேட்டி ஒன்றில் ஓவியா, "பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்திருப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.