தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
பிக் பாஸ் ஜனனி ஐயரின் தங்கை இவ்வளவு அழகா.? ஹீரோயினாவே நடிக்கலாம் போலயே ரசிகர்கள் கமெண்ட்..
கோலிவுட் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஜனனி அய்யர். ஜனனி ஐயரின் நடிப்பின் மூலம் மக்கள் மனதை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார்.
தன் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் விளம்பர படங்களின் மூலம் நடித்து தமிழில் அறிமுகமானார். இதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஜனனி ஐயர் விண்ணைத்தாண்டி வருவாயா, தெகிடி, பலூன், அவன் இவன், அதே கண்கள் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகையாக இருக்கிறார்.
இதுபோன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி ஐயர் பட வாய்ப்புக்காக அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய தங்கையின் புகைப்படத்தையும் சேர்த்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து அடுத்த ஹீரோயினா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.