சினிமா

ப்பா.. கொடுத்து வச்சவன்யா! பிக்பாஸ் கேபி வீட்டில் நடந்த கொண்டாட்டம்! வைரலாகும் கியூட் வீடியோ!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவர

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் கேப்ரியல்லா. பிக்பாஸ் வீட்டில் இருந்த போது யாரைக் குறித்தும் குறை பேசாமல், கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட்டு, அனைவருடனும் அன்பாக இருந்த அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

கேப்ரியல்லா இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது அசத்தலான நடன திறமையால் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். மேலும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் கேபி தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் கேபிரில்லா அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார். இந்நிலையில் கேபி தற்போது  தனது செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி கோலாகலமாக  கொண்டாடியுள்ளார். மேலும் அவர் தனது செல்ல நாய்குட்டிக்கு கேக் ஊட்டிவிடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட பாலா, சோம்சேகர் போன்ற சில பிரபலங்கள் கேபியின் நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.
 


Advertisement