சினிமா

செம கியூட்ல.! பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமனின் மகளை பார்த்தீர்களா! அப்படியே அப்பா மாதிரியே இருக்காரே!!

Summary:

தமிழில் திரிஷா நடிப்பில் வெளிவந்த அபியும் நானும் படத்தில் நடித்ததன்  மூலம் அறிமுகமானவ

தமிழில் திரிஷா நடிப்பில் வெளிவந்த அபியும் நானும் படத்தில் நடித்ததன்  மூலம் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். அதனை தொடர்ந்து அவர் உன்னைபோல் ஒருவன், கோ, இவன் வேறமாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் மாடலிங் துறையிலும் பிரபலமான இவர் பல்வேறு விதமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராமன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவருக்கு சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. கணேஷ் வெங்கட்ராமன் தற்போது உன் பார்வையில் என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

கணேஷ் பிரபல சீரியல் நடிகை நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த அழகிய தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராமன் அவரது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement