வாவ்! பிக்பாஸ் கணேஷின் செல்லமகளா இது! எவ்வளவு அழகு! இணையத்தை கலக்கும் கியூட் புகைப்படம்!

வாவ்! பிக்பாஸ் கணேஷின் செல்லமகளா இது! எவ்வளவு அழகு! இணையத்தை கலக்கும் கியூட் புகைப்படம்!



bigboss ganesh daughter photo viral

தமிழ் சினிமாவில் அபியும் நானும் படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இதனை தொடர்ந்து அவர் உன்னைப்போல் ஒருவன்  தீயா வேலை செய்யணும் குமாரு, சந்திரா, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துகொண்டு நிகழ்ச்சியின் இறுதி நிலை வரை சென்று  மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். கணேஷ் வெங்கட்ராமன் கடந்த 2015 ஆம் ஆண்டு நிஷாவை திருமணம் செய்து கொண்டார். நிஷாவும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் அழகிய  காதல் ஜோடியினராக இருந்து வருகின்றனர்.

ganesh venkatram

இந்நிலையில் கணேஷ்- நிஷா ஜோடிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமைரா என்ற அழகிய பெண்குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் கணேஷின் மகளா இது? இவ்வளவு வளந்துவிட்டாரே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ganesh venkatram