BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
என்னை வாழ விடுங்க.! செம கடுப்பான பிக்பாஸ் கேப்ரில்லா! ஏன்? அப்படி என்னதான் நடந்துச்சுனு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக, குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. அதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் ஒரு நாள், சமுத்திரக்கனி இயக்கிய அப்பா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் கேப்ரில்லா சிறுவயதிலேயே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானவர். கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அதன்பின்னர் சிங்கிள் பசங்க, பிக்பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் அவர் தற்போது ஈரமான ரோஜாவே தொடரின் இரண்டாம் பாகத்தில் முக்கிய நாயகியாக நடிக்கிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அண்மையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர், சினிமாவில் உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும்நிலையில் ஏன் சீரியலில் நடிக்கிறீர்கள்? என கேட்க, அதற்கு அவர் 'எல்லா மீடியாவும் ஒன்றுதான். ஒரு நடிகராக நாம் பணியில் சிரத்தையாக எவ்வளவு பங்களிக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஒவ்வொரு நாளும் ஒருவரின் வீடு தேடி செல்வது அவ்வளவு எளிதான காரியமில்லை என விளக்கமளித்துள்ளார்.
மேலும் மற்றொரு ரசிகரும் இதே மாதிரியான கேள்வியை கேட்க, உங்ககிட்ட நான் கருத்து கேட்டேனா? இல்ல உங்க வேலையை பற்றி நான் கமெண்ட் பண்ணினேனா? வாழ விடுங்க என ஆவேசமாக கூறியுள்ளார்.