என்னது.. இவரா! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு குட்பை சொல்லபோவது யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!!

என்னது.. இவரா! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு குட்பை சொல்லபோவது யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!!


bigboss-elimination-this-week-DKS9FK

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5, 87 நாட்களைக் கடந்து நாளுக்கு நாள் மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் இதுவரை எலிமினேட் ஆகியுள்ளனர்.

மேலும் தற்போது பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப்  ஆகியோர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ ஃபைனலுக்கான டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பலவகையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்ட நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் வெறித்தனமாக விளையாடி வந்தனர்.

bigboss

இந்நிலையில் அதில் வெற்றிபெற்று அமீர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், சஞ்சீவ் மிக குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாகவும் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. மேலும் கடைசி நேரத்தில் அவருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தால் தப்பிக்கவும் வாய்ப்புள்ளது. அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.