சினிமா

என்னது.. இவரா! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறபோகும் பிரபலம் யார்னு பார்த்தீங்களா! கசிந்த தகவல்!!

Summary:

என்னது.. இவரா! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறபோகும் பிரபலம் யார்னு பார்த்தீங்களா! கசிந்த தகவல்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 வில் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் திருநங்கையான நமிதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நாடியா சாங், அபிஷேக், நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு மற்றும் சுருதி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனார்கள்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்களே உள்ளனர். மேலும் கடந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கால் வீடே ரணகளமானது. வாக்குவாதங்கள், மோதல்கள் என எதற்கும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டுள்ளது. ஆரம்பத்தில் அன்பாக,அமைதியாக விளையாடி வந்த பலரும் தற்போது கேமரா இருப்பதை மறந்து தங்களது சுய ரூபங்களை காட்ட துவங்கியுள்ளனர்.

இந்த வாரம் ராஜு, அபினய், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி, மதுமிதா ஆகிய 7 பேர் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் அவர்களில் அண்ணாச்சி, பாவனி மற்றும் மதுமிதா ஆகிய மூவரும் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாகவும்,  அவர்களிலேயே ஜெர்மனியை சேர்ந்த மாடலும், ஆடை வடிவமைப்பாளருமான மதுமிதா மிகவும் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது 


Advertisement