இணையத்தையே கலக்கும் பிக்பாஸ் தர்சனின் கண்ணீர் சிந்தவைக்கும் ஆல்பம் வீடியோ!!bigboss dharshan album video

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.  

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3ல் 16 போட்டியாளர்களில் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் என்பவர் கலந்து கொண்டுள்ளார். இவர் மிகவும் கஷ்டப்படக் கூடிய வறுமையான குடும்பத்தில் இருந்து தீராத முயற்சியால் முன்னேறி வந்தவர்.

bigboss

மேலும் தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் அன்புடன் பழக கூடியவர். மேலும் எவரைப் பற்றியும் புறம் பேசாமல்,  யார் வம்புக்கும் செல்லாமல் நேர்மையாக இருப்பவர். மேலும் இவர் சமீபத்தில் வனிதா பேசியத்திற்கு எதிர்த்து குரல் எழுப்பி இருந்தார். அதற்கு ரசிங்கர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் ரசிகர்கள்தர்ஷன் குறித்த புகைப்படங்களையும், அவரை குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் சமூகவலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் தர்ஷன் நடித்த  நீ போன பின்னால் என்ற ஆல்பம் பாடல் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதனை தர்ஷன் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.