வாவ்.. பிக்பாஸ் தர்சனுக்கு இப்படியொரு அழகான தங்கையா? வைரலாகும் வீடியோவால் வாயை பிளந்த ரசிகர்கள்!!bigboss dharsan mother and sister came to bigboss house

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்ஷண், வனிதா ஆகியோர் மேட்டுமே உள்ளனர் .

மேலும் கடந்த வாரம் சீக்ரட் ரூமில் அடைக்கப்பட்ட சேரன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர பலருக்கும் சந்தோசம் ஏற்பட்டது. 

dharshan

இந்நிலையில் நேற்றைக்கு முந்தையநாள் முதல் புதிய டாஸ்க் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர். அதன்படி கடந்த நாட்களில் முகேன் மற்றும் லாஸ்லியாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து இன்று தர்சனின் அம்மா மற்றும் அவரது தங்கை பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் மகனை பார்த்ததும் தர்சனின் தாயார் சந்தோஷத்தில் கண்ணீர் வடித்து மகனுக்கு பாசத்துடன் முத்தமழையை பொழிகின்றனர். மேலும் அவரது தங்கையும் அண்ணனை அன்போடு கட்டிஅணைத்துள்ளார். மேலும் தர்சனின் தாயார் பிறந்தநாள் கொண்டாட்டமும் அரங்கேறியுள்ளது. இந்த பிரமோ வீடியோ வெளியான நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பரப்பில் உள்ளனர்.