சினிமா

வாவ்..எம்புட்டு அழகு! பிக்பாஸ் டேனியலின் மனைவி மற்றும் குட்டி பையனை பார்த்தீங்களா!! இணையத்தை கலக்கும் புகைப்படம்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் டேனியல். இவர் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 

 கிட்டத்தட்ட 77 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களால் கவரப்பட்ட அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய சில நாட்களிலேயே தனது நீண்ட நாள் காதலியான டெனிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்களுக்கு 2020ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் டேனியல் தற்போது அவரது மனைவி மற்றும் மகனுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது வைரலான நிலையில் இதனைக் கண்ட ரசிகர்கள் வாவ் செம க்யூட் என குழந்தையை கொஞ்சி தீர்க்கின்றனர்.

 


Advertisement