
Bigboss contestants enjoyed in sandy house
பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், லாஷ்லியா, ஷெரின் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகிய நால்வர் மட்டும் இறுதி வாரத்திற்கு தேர்வாகினர்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பிக்பாஸ் பட்டத்தை வெல்ல போவது யார் என ரசிகர்கள் பெரும் ஆவலோடு இருந்த நிலையில், அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் மூன்று பட்டத்தை கைப்பற்றியதோடு 50 லட்சம் பரிசு தொகையையும் வென்றார். மேலும் இரண்டாம் இடத்தை சாண்டி மாஸ்டர் கைப்பற்றினர். மூன்று மற்றும் நான்காம் இடத்தை லாஷ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டைவிட்டு நண்பர்களாக வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக உற்சாகமாகவும் ஊர் சுற்றி வருகின்றனர். இந்நிலையில் தர்ஷன் கவின் என போட்டியாளர்கள் அனைவரும் சமீபத்தில் சாண்டியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும் அங்கு சாப்பிட்டு, சாண்டியின் மகள் லாலாவுடன் கொஞ்சி விளையாடியுள்ளனர்.
இந்நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அதனை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Advertisement
Advertisement