சினிமா

செம கெத்தாக என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் பாலாஜி! எந்த பிரபல டிவி நிகழ்ச்சியில் தெரியுமா? சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!

Summary:

செம கெத்துதான்.. சின்னத்திரையில் களமிறங்கிய பிக்பாஸ் பாலாஜி! எந்த பிரபல டிவி நிகழ்ச்சியில் தெரியுமா? சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு  மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியில் திறமையாக விளையாடி நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

மேலும் பாலாஜி முருகதாஸ் வெள்ளித்திரை படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் சூப்பர் குயின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆஷா கௌடா, வைஷ்ணவி, ஜனனி, ஸ்வாதி, தேஜஸ்வினி, ஐரா, லாவண்யா, ஆயிஷா, பார்வதி, கண்மணி மனோகர், மற்றும் ஸ்ரீது கிருஷ்ணன் உள்ளிட்ட பல பரிச்சயமான பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் சூப்பர் குயின் பட்டத்தை தட்டிச் செல்ல அனைத்து சவால்களையும் திறம்பட செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் நகுல் மற்றும் ராதா நடுவர்களாக உள்ளனர். இந்த நிலையில் பலரையும் பெருமளவில் கவர்ந்து வரும் இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் புகழ் பாலாஜி விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Advertisement