என்னது! குடிக்கு அடிமை என பிக்பாஸ் பாலாஜி சொன்ன அவரது அம்மா, அப்பா இவர்கள்தானா? பாத்தா அப்படி தெரியலையே! புகைப்படம் இதோ!

என்னது! குடிக்கு அடிமை என பிக்பாஸ் பாலாஜி சொன்ன அவரது அம்மா, அப்பா இவர்கள்தானா? பாத்தா அப்படி தெரியலையே! புகைப்படம் இதோ!


bigboss-balaji-parent-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் நான்கில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் பாலாஜி. மாடலான இவர் 2018 ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றார். 

இவர் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரிடமும் முகத்துக்கு நேராக பேசக்கூடியவர். எதையும் யோசிக்காமல் முரட்டுத்தனமாக கோபப்பட கூடியவர். பலர்  இவரை விரும்பினாலும் சிலர் இவர் குறித்த மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

balaji

மேலும் பாலாஜி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய புதிதில், டாஸ்க் ஒன்றில் தனது தாய் தந்தை இருவரும் குடிக்கு அடிமையானவர்கள் எனவும், எனது அப்பா குடித்துவிட்டு இரவில் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி கண்கலங்கினார். மேலும் ஒரு குழந்தையை பெத்து வளர்க்க முடியவில்லை எனில் ஏன் குழந்தை பெத்துக்கணும் எனவும் உருக்கமாகப் பேசி அனைவரையும் கண் கலங்க வைத்தார். ஆனால் அப்பொழுதே பாலாஜி குறித்த பல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் சிறு வயதில் தனது தாய், தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் இவர்களைப் பார்த்தால் குடிக்கு அடிமை போல தெரியவில்லையே என கூறிவருகின்றனர்.