சினிமா

ஹீரோவாகிறார் நம்ம பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்! அதுவும் யார் படத்தில் பார்த்தீர்களா! அவரே வெளியிட்ட வீடியோ!!

Summary:

ஹீரோவாகிறார் நம்ம பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்! அதுவும் யார் படத்தில் பார்த்தீர்களா! அவரே வெளியிட்ட வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 2017 ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது 5வது சீசன் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், ஹரிஷ் கல்யாண், முகேன், கவின், ரைசா, ரம்யா பாண்டியன், ஷிவானி உள்ளிட்ட பல போட்டியாளர்களும் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் சக போட்டியாளர்களுடன் சண்டை, ஷிவானியுடன் காதல் போன்ற பல சர்ச்சைகளில் சிக்கி பெருமளவில் பிரபலமானவர்.

தற்போது பாலாஜி முருகதாஸும் சினிமாவில் ஹீரோவாகிறார். அதாவது அவர் லிப்ரா புரடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் பட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோவை பாலாஜி மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
 


Advertisement