அழகிய பெண்ணாக மாறிய பிக்பாஸ் பிரபலம்.! இவரு யாருனு உங்களுக்கு தெரியுதா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்!!

அழகிய பெண்ணாக மாறிய பிக்பாஸ் பிரபலம்.! இவரு யாருனு உங்களுக்கு தெரியுதா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்!!


bigboss-abisheik-ladygetup-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் 5 வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் அபிஷேக் ராஜா. இவர் யூடியூப் சேனலில் திரைப்பட விமர்சகராவார். அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அனைவருக்கும் தனது மீது கவனத்தை கொண்டுவர பல தில்லாலங்கடி வேலைகள் செய்து விமர்சனத்திற்கு ஆளானார்.

ஆனால் அவர் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது வாரமே பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார். பின்னர் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியில்  நுழைந்து சில நாட்களிலேயே வெளியேறினார். அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். அவருக்கு ஜோடியாக நதியா சாங் நடனமாடுகிறார்.

bigboss

இந்த நிலையில் அவர் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றிக்காக பெண் வேடமிட்டு நடனமாடியுள்ளார். அந்த புகைப்படத்தை பகிர்ந்து விஜய் டிவி சமூகவலைதளப்பக்கத்தில், இது யாருனு உங்களால கெஸ் பண்ண முடியுமா? என கேட்டுள்ளது. அதற்கு நெட்டிசன்ஸ் கலாய்த்து பல கமெண்ட் செய்து வருகின்றனர்.

bigboss