இது என் குடும்பம்! தளபதி விஜய் ஸ்டைலில்.. இணையத்தில் டிரெண்டாகும் பிக்பாஸ் ஆரியின் செல்பி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவர


bigboss-aari-selfi-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றவர் நடிகர் ஆரி. இவர் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ரெட்டைசுழி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நெடுஞ்சாலை, மாலை பொழுதின் மயக்கத்திலே, நாகேஷ் திரையரங்கம் என தொடர்ந்து பல படங்களில் நாயகனாக முத்திரை பதித்துள்ளார்.

இவர் நடிப்பு மட்டுமின்றி ஜல்லிக்கட்டு பிரச்சினை, சென்னை வெள்ளம், விவசாயிகள் பிரச்சினை என அனைத்து பிரச்சினைகளுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளார். மேலும்  கஷ்டப்படுபவர்கள் பலருக்கும் உதவி செய்து வருகிறார். இந்த நிலையிலேயே ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியாளரானார்.

அதனை தொடர்ந்து  பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு ஆரி முதன்முதலாக தனது ரசிகர்களை சென்னை மெரினா மாலில் சந்தித்துள்ளார். மேலும் அப்பொழுது அவர் தனது ரசிகர்களுடன் செல்பியும் எடுத்துள்ளார். அதனை இணையத்தில் பகிர்ந்த அவர், இது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அல்ல. என் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது போன்றே தளபதி விஜய் நெய்வேலியில் படப்பிடிப்பில் ஈடுபட்டபோது பஸ் மீது ஏறி நின்று தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.