பிக்பாஸ் தாமரைக்கு சர்ப்ரைஸாக சக போட்டியாளர் வாங்கி கொடுத்த ஹிப்ட் ! அது யார்னு தெரியுமா?

பிக்பாஸ் தாமரைக்கு சர்ப்ரைஸாக சக போட்டியாளர் வாங்கி கொடுத்த ஹிப்ட் ! அது யார்னு தெரியுமா?


Bigboss 5 varun surprise gift  for thaamarai

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற  பிக்பாஸ் சீசன் 5 இல் 18  போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தாமரை  செல்வி. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர் மேடை  நாடக கலையை  சேர்ந்தவர்.

பிக் பாஸ் வீட்டில் முதல் இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார் என்று அனைவரும் எண்ணிய நிலையில், 15 வாரங்கள் தாக்குப்பிடித்து, டாப் 6ல் ஒருவராக வந்தார் தாமரை.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, அங்கிருந்த ஃபிரிட்ஜ், மைக்ரோவன் இவற்றினை அடிக்கடி பிக்பாஸிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ள தாமரை நேற்றைய தினத்தில் தனக்கு வருண் டபுள் டோர் கதவு வைத்த கருப்பு கலர் பிரிட்ஜ், ஓவன் எல்லாம் வாங்கிதந்ததாகவும், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது இதெல்லாம் நான் பிக்பாஸ்சிடம் கேட்டு கொண்டே இருந்ததால் எடுத்துக்கொண்டு  நிகழ்ச்சிக்குப் பிறகு வருண் எனக்கு வாங்கித் தந்தான்  எனவும் வீடியோவில் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி  பலரும்  வருணை  பாராட்டி வருகின்றனர்.