கண்ணீர் விட்டு கதறி அழுத அனிதா சம்பத்! ஆறுதல் கூறிய சக போட்டியாளர்கள்! நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!



Bigboss 4th day first promo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி தற்போது நான்கு  நாட்கள் கடந்துள்ளது. இதில் மக்களுக்கு ஓரளவிற்கு பரிச்சயமான சில பிரபலங்கள் போட்டியாளராக  கலந்து கொண்டுள்ளனர். மேலும் சில புதுமுகங்களும் பங்கேற்றுள்ளனர்.

இவ்வாறு 16 போட்டியாளர்களுள்  ஒருவராக கலந்துகொண்டவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளிலேயே அவருக்கும் மற்றொரு சக போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்திக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சூடுபிடிக்க ஆரம்பித்தது. மேலும் அனிதாவிற்கும் சுரேஷுக்கும் இடையே நாளுக்கு நாள் வாக்குவாதமும், சண்டையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் கடந்த இரு நாட்களாக பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள், அவற்றில் ஏற்பட்ட கஷ்டங்கள் அவமானங்கள் போன்றவற்றை கூறிவருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தி வாசிப்பாளரான அனிதாவும் தனது வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை கண்கலங்கியவாறு கூறியுள்ளார். மேலும் மற்ற போட்டியாளர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். இந்த ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.