சினிமா வீடியோ

பிறந்த 60 நாளிலேயே குழந்தைக்கு நேர்ந்த விபத்து! கதறி அழுத அறந்தாங்கி நிஷா! வைரலாகும் வீடியோ!

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது நாளின் 4 4வது ப்ரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.  இதில் ரசிகர்களுக்கு ஓரளவிற்கு பரிச்சயமான பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி முதல் நாளிலேயே சூடுபிடிக்க துவங்கியது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் இரண்டாவது நாளின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அறந்தாங்கி நிஷா  தனது வாழ்வில் நேர்ந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். 

அப்பொழுது அவர் தனது குழந்தை பிறந்த 60வது நாளில் விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும்  இந்த உலகில் அழகாக இருப்பவர்களை விட, அவமானப்பட்டவர்களே அதிகம்  சாதித்ததாகவும், நான் இன்னும் நிறைய சாதிப்பேன் எனவும் கண்ணீர்மல்க கூறியுள்ளார்.  இதனைக் கேட்ட சக போட்டியாளர்கள் கண்கலங்கியுள்ளனர்.  இந்த ப்ரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement