சினிமா பிக்பாஸ்

எனக்கு 18 வயதில் பையன் இருக்கான், என்னை பார்த்தால் அப்படி தெரியுதா? பொங்கி எழுந்த வத்திக்குச்சி வனிதா!

Summary:

big boss vanitha angry


பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்கள் கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் வனிதாவின் ரீ என்ட்ரிக்கு பிறகு பிக்பாஸ் இல்லம் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இல்லமல் நகர்கிறது. இதன் விளைவாக நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

தற்போது வைல்டு கார்டு என்ட்ரியாக நடிகை கஸ்தூரி பங்கேற்றுள்ளார். வனிதாவை ஹோட்டல் டாஸ்க்கின் போது கெஸ்ட்டாக அறிமுகப்படுத்திய பிக்பாஸ், நேற்று திடீரென வனிதாவையும் வைல்டு கார்டு என்ட்ரி என கூறி ஷாக் கொடுத்துள்ளனர்.


வனிதா, கஸ்தூரி இரண்டு பேரையும்  ஒரே வீட்டுக்குள் வைத்துக்கொண்டு அவர்கள் போட்டுக்கொள்ளும் சண்டை எக்ஸ்ட்ரீம் ஆனது. நேற்றைய நிகழ்ச்சியில் ஸ்கூல் டாஸ்கில் வனிதாவை வாத்து வனிதா என்று கஸ்தூரி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வத்திகுச்சி வனிதா சண்டையை மீண்டும் ஆரம்பித்தார்.

அப்போது கோபமடைந்த வனிதா, யார பார்த்து குண்டுன்னு சொல்றீங்க? எனக்கு 18 வயதில் பையன் இருக்கான், என்னை பார்த்தால் அப்படியா தெரியுதா உனக்கு என்று கேட்டு கஸ்தூரியிடம் சண்டை போடுகிறார் வனிதா.


Advertisement