பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவா இது.! வைரலாகும் வித்தியாசமான போட்டோ சூட்.!?big-boss-title-winner-archana-latest-photoshoot

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக இருந்து வருபவர் அர்ச்சனா. இவர் முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். மேலும் ஒரு சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Archana

இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 7வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக வைல்ட் கார்டு என்ட்ரீயில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் செயல்கள் எல்லாமே மக்களை கவர்ந்தது என்பது தான் உண்மை.

இவ்வாறு மக்களின் மனதில் இடம் பிடித்த அர்ச்சனா பிக் பாஸ் போட்டியில் இறுதிவரை ஸ்ட்ராங் பிளேயராக இருந்து டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த பின்னரும் தற்போது வரை இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Archana

இது போன்ற நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்பு முதன்முதலாக போட்டோ ஷூட் செய்துள்ளார். போட்டோ சூட்டில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு "எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை புத்திசாலித்தனமாக நீங்களே முடிவு எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்பதிவில்இவருக்கு பலரும் வாழ்த்து கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.