சினிமா வீடியோ பிக்பாஸ்

என்னது டாஸ் இது! வித்தியாசமான முறையில் டாஸ் கொடுத்த பிக்பாஸ், மாட்டி தவிக்கும் போட்டியாளர்கள் - வெளியான புதிய ப்ரோமோ வீடியோ.

Summary:

Big boss season 3 promo video

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக 90நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது . மேலும்  இறுதி கட்டத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ளநிலையில் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பட்டத்தை தட்டிசெல்லப்போவது யார் என அறிந்துகொள்ள  ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்கை கொடுத்து வருகிறார். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் தர்ஷன் ஷெரின் மற்றும் சாண்டியை காப்பாற்ற பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் என்று பிக்பாஸ் கூற உடனே சாப்பிடுவது போன்ற காட்சி வெளியானது.

அதன் பிறகு வெளியான இரண்டாவது ப்ரோமோவில் லாஸ்லியா கவினுக்காக சாப்பிடுவது போன்ற காட்சி வெளியானது. இந்நிலையில் தற்போது வந்த மூன்றாவது ப்ரோமோவில் தலைவர் போட்டிக்கான டாஸ் கொடுக்கப்படுகிறது. அதில் உடல் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் சுற்றி கொண்டு ஒரு இலக்கில் தானாக எழுந்து நிற்க வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளது.


Advertisement