சினிமா பிக்பாஸ்

ப்ப்பா! என்ன ஒரு வெறித்தனம்! பிக்பாஸ் கவினுக்கு இப்படியும் ஒரு ரசிகரா! வைரலாகும் புகைப்படம் .

Summary:

big boss kavin fans

பிரபல தொலைக்காட்சியான டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்டு அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் கவின். இதற்கு முன்பு சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் கவின். அதன் பிறகு பிக்பாஸில் கலந்துகொண்டு அதிகபட்ச ரசிகர்கள் பட்டாளத்தை வென்றவர்.

மேலும் கவின் இறுதிவரை வரவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் திடீரென போட்டியை விட்டு வெளியேறினார். இது ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

kavin க்கான பட முடிவு

மேலும் நடிகர் கவின் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் கொண்டாட்டத்தின் போது இனி எனது வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஹீரோக்களை தாண்டி நடிகர் கவினுக்காக அவரது ரசிகர் ஒருவர் வெறித்தனமான செயல் ஒன்றே செய்துள்ளார். அதாவது நடிகர் கவின் உருவத்தை தனது கையில் பச்சை குத்தி உள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement