
Big boss hindi
பிக்பாஸ் என்னும் ரியாலிட்டி ஷோ முதன் முதலில் இந்தி தான் ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் பரவ ஆரம்பித்தது. இதனால் இந்திய மக்களிடையே பிக்பாஸ் பிரபலமடைய தொடங்கியது.
அதாவது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வெளி உலக தொடர்பு எதும் இல்லாமல் 100 நாட்கள் ஒரே வீட்டில் இருக்க வேண்டும். மேலும் தங்களுக்கு தேவையான உணவை அவர்களே சமைத்து கொள்வது உட்பட அனைத்து வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டும்.
இந்நிலையில் தற்போது இந்தியில் பிக்பாஸ் சீசன் 13 செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி துவங்கவுள்ளது. அதை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியின் டீசரில் காட்டப்பட்டுள்ள ஒரு விஷயம் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமின்றி ஒரு நாய் குட்டியும் வீட்டுக்குள் செல்லவுள்ளது. இதுவரை இல்லாத வகையில் தற்போது இப்படி ஒரு மாற்றம் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
Advertisement
Advertisement