சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் கவின் தற்போது எங்கு சென்றுள்ளார் தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்.

Summary:

Big boss 3 we are boys team

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் வீ ஆர் த பாய்ஸ் என்று கலாட்டா செய்து வந்தவர்கள் சாண்டி, முகேன், கவின், தர்ஷன். இவர்களை யாரலும் மறக்கமுடியாது. அதில் ஒருவரான முகேன் தான் பிக்பாஸ் பட்டத்தை தட்டி சென்றார்.

முகேன் தனது வெற்றிக்கு பிறகு தனது சொந்த நாடான மலேசியாவிற்கு சென்று விட்டார். ஆனால் கவின், தர்ஷன், சாண்டி ஆகிய மூவரும் ஜாலியாக வெளியே சுற்றி வருகின்றனர். பேட்டியாக இருந்தாலும் அல்லது நிகழ்ச்சி, எங்கு சென்றாலும் ஒன்றாக தான் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட தர்ஷன் மற்றும் சாண்டி சென்றிருந்தனர். அப்போது சாண்டியிடம் கவின் எங்கே என கேட்டுள்ளனர். அதற்கு அவர் படப்பிடிப்புக்காக அவர் வெளிநாடு சென்றுள்ளார் என கூறியுள்ளார். உடனே கவின் ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர்.


Advertisement