தனது அடுத்த அதிரடியை ஆரம்பித்த வனிதா - வைரலாகும் புகைப்படம்.

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சுவாரஸ்சியத்தை ஏற்படுத்தியவர் நடிகை வனிதா. இவருக்காகவே மக்கள் பிக்பாஸை விரும்பி பார்த்தார்கள் என்றே சொல்லலாம்.
இவர் முதலில் எலிமினேஷன் ஆனது அந்த அளவிற்கு விறுவிறுப்பாக செல்லவில்லை பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆனால் ரீ என்ட்ரி கொடுத்ததும் சுவாரஸ்யம் ஆரம்பமானது. அதன் பிறகு அவருக்கு வத்திகுச்சி என்ற பெயரும் கிடைத்தது.
இந்நிலையில் தற்போது வீட்டை விட்டு வெளியேறிய வனிதா தனது அடுத்த வேலையை செய்ய துவங்கியுள்ளார். தற்போது புதிய ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் அடுத்த பட படப்பிடிப்பை தொடங்கிவிட்டாராம், அதற்கான புகைப்படத்தை போட்டு விரைவில் ஒரு அப்டேட் என பதிவு செய்துள்ளார்.
Shooting for a new project..will update soon pic.twitter.com/u9x3jFp2BA
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 9, 2019