பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுத்த கமல் - அதிர்ச்சியான போட்டியாளர்கள்.



Big boss 3 today promo video

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. இன்னும் ஒரு வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில் யார் அந்த இறுதி பட்டத்தை வெல்ல போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் சென்ற வாரம் 5 லட்சத்துடன் கவின் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் தற்போது 5 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.மேலும் சனி கிழமையான நேற்று நடிகர் கமல் அவர்கள் போட்டியாளர்களுடன் உறையாடினார். அதுமட்டுமின்றி கவினை அழைத்து பேசினார்.

Big boss 3

தற்போது வந்த புதிய ப்ரோமோவில் கமல் வீட்டில் உள்ளவர்களிடம் கவின் எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு சென்றதால் எவிக்சன் இருக்காது என நினைத்து கொண்டிருப்பீர்கள் என கூறி விட்டு அவர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார்.