சினிமா பிக்பாஸ்

சொல்வதெல்லாம் சொல்லிவிட்டு கமலை பார்த்ததும் கம்மிய கவின் - வைரலாகும் வீடியோ.

Summary:

Big boss 3 today promo video

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. இன்னும் ஒரு வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில் யார் அந்த இறுதி பட்டத்தை வெல்ல போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 5 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியானார் கவின். ஆனால் அவர் வெளியாவதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கமல் அதற்கு கவின் விடை கூற வேண்டும் கூறினார்.

இந்நிலையில் தற்போது வந்த புதிய ப்ரோமோவில் கமல், கவின் பணத்திற்காக வெளியே செல்லவில்லை என கூறினார். அதுமட்டுமின்றி கவின் லாஸ்லியாவிடம் சூசகமாக பேசுகிறார். மேலும் கமல் சாரை பார்த்து சிரிக்கிறார்.

அதற்கு கமல் நான் உங்களது அப்பா இல்லை என கூறுகிறார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement